கே எஸ் எம் யு வில் பற்கள் பரிசோதிக்கும் துறை

    

சிறப்புவியல் – பற்கள் பரிசோதிக்கும் துறை [டெண்டிஸ்டிரி]


தகுதி : பற்கள் பரிசோதிக்கும் மருத்துவர் (டெண்டிஸ்ட்)


படிப்பிற்கான கால வரையறை – 5 வருடங்கள்

 

குர்ஸ்க் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் 1997-ல் பற்கள் பரிசோதிக்கும் துறை திறக்கப்பட்டது. இந்த துறையில் தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 

பல்கலைக்கழகத்தில் 49 துறைகளில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.  இந்த துறையில் தற்போது பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக – 60 D.Sc., 177Ph.D., ருஷியன் ஃபெடரேஷனைச் சேர்ந்த 2 ஹானர்டு அறிவியலார்கள், பல்வேறுபட்ட ருஷ்ய மற்றும் சர்வதேச கல்வியாளர்களை உறுப்பினர்களாக கொண்ட - 35-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் அதன் தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள்.  ருஷியன் ஃபெடரேஷனைச் சேர்ந்த 10 ஹானர்டு மருத்துவர்கள் மருத்துவ துறைகளில் பணிபுரிகிறார்கள். உண்மையில் அனைத்து ஆசிரியர்களும் உயர் மற்றும் முதல் நிலை மருத்துவ பிரிவைச் சேர்ந்தவர்கள்.  ஒன்றுக்கொன்று தொடர்புடைய கல்விப் துறைகளானது 6 பெரும் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது : மனித அறிவுச்சார்ந்த துறை மற்றும் சமூக-பொருளாதார அறிவியல்கள், இயற்கை அறிவியல்கள், மருத்துவ-உயிரியல் சார்ந்தவை, மருத்துவ-முன்பாதுகாப்பு, மருத்துவயியல் மற்றும் சிறப்பு பிரிவுகள்.

 

பற்கள் பரிசோதிக்கும் கல்வித்துறையில் ஐந்து வருடங்களை முடித்தப்பின்பு, பட்டதாரிகள் மேலும் மருத்துவ ரீதியான சிறப்பு நிபுணத்துவம்  அல்லது நேரிடை பயிற்சி பெறுவதற்காக ஐந்து சிறப்பு நிபணர்களிடம் பயிற்சி பெற வேண்டும்.

தொழில் ரீதியான பயிற்சி பெற்று முடிந்த பட்டதாரி மருத்துவ-முன்பாதுகாப்பு நிறுவனங்களிலோ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களிலோ மற்றும் மருந்து ஆய்வு ஆய்வகங்களிலோ, உயர்நிலை அல்லது மேல் கல்வி நிறுவனங்களில் பற்கள் பரிசோதிக்கும் மருத்துவராக, ஒரு ஆராய்ச்சி உதவியாளராகா அல்லது ஒரு ஆசிரியராக பணியாற்ற முடியும்.