மேல்நோட்டம்:
1935இல் நிறுவப்பட்டது
6,400க்கு மேற்பட்ட மாணவர்கள்/ 650 கல்விப் பணியாளர்கள்
WHO GMC & பிற பன்னாட்டு மருத்துவ வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்டது
ரஷ்யாவிலுள்ள தலை சிறந்த 10 மருத்துவப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று
ரஷ்யா & ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரிய மருத்துவப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று
___________________________________________________________________________________________________________________________________
___________________________________________________________________________________________________________________________________
பல்கலைக்கழகம் பற்றிய
குறிப்பு
கே எஸ் எம் யு 1935இல் நிறுவப்பட்டது; ரஷ்யாவிலுள்ள மிகச் சிறந்த 10 மருத்துவப் பல்கலைக் கழகங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. கே எஸ் எம் யு முழு மருத்துவப் பயிற்சித் திட்டத்தை ஆங்கில மொழியில் அளித்த முதல் பல்கலைக்கழகம் என்பது, அதன் பல சாதனைகளுள் ஒன்றாக விளங்குகிறது.
கே எஸ் எம் யுவின் கட்டமைப்பில், வாழ்க்கைச் சூழல் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் மற்றும் நோயறியும் மருந்தகம் மற்றும் மருத்துவ நிலையம் ஆகியனவற்றை நாங்கள் கொண்டிருக்கிறோம். இன்றைய நாள் வரை கே எஸ் எம் யு 14 கல்விப் பிரிவுகளில் 67 துறைகளில் 25,000க்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.
பணியாளர் அமைப்பில் 663 ஆசிரியர்கள் உள்ளனர்; அவர்களில் 333 பிஎச் டி மற்றும் 92 டி.எஸ்சி பட்டம் பெற்றோர் அடக்கம்; இவர்கள் 6400 மாணவர்களுக்குக் கல்விச் சேவை அளிக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் 500,000க்கு மேற்பட்ட இதழ்கள், நூல்கள் மற்றும் வெளியீடுகள் கொண்ட மிகச் சிறந்த நூலகம் இருப்பது பெருமையான ஒன்றாகும்.
பல்கலைக்கழக வளாகத்தில் நான்கு கற்பிக்கும் கட்டங்களும் ஐந்து மாணவர் தங்கும் விடுதிகளும் உள்ளன. மூன்று விளையாட்டு கட்டடங்களும் துப்பாக்கிசுடும் பகுதி ஒன்றும் அடங்கிய பொழுதுபோக்கு வசதிகளால் மாணவர்கள் மகிழ்ச்சியுறுகின்றனர்.
கல்விநிலைய வகை: அரசு மருத்துவப் பல்கலைக்கழகம்.
ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் படிப்புகள்: பல்கலைக்கழக புகுமுகப் படிப்பில் அனைத்துப் படிப்புகள், மருத்துவம், மருந்தியல் மற்றும் ஸ்டொமோட்டாலஜிகல் (பல்மருத்துவ) பிரிவுகள்.
கல்வி அமைப்பு: ஓர் கல்வியாண்டில் 2 அரையாண்டுப் பருவ முறை.
மொழிப் பயிற்சி: ரஷ்யன், ஆங்கிலம்.
கல்விப் பணியாளர்கள்: 650 விரிவுரையாளர்கள்; இவர்களில் 70% பேர்
பிஎச் டி அல்லது
இணையான படிப்பு உள்ளவர்கள்; டிஎஸ். சி. பட்டம் பெற்ற 92
பேராசிரியர்கள்
வகுப்பு அளவு: (படிப்புக்கு ஏற்ப) ஒரு குழுவில் 6 முதல் 12 மாணவர்கள்.
வயது வரம்பு: குறைந்த அளவு வயது வரம்பு 16; உயரளவு வயது வரம்பு இல்லை;
முதிர்ச்சியுற்ற விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
கே எஸ் எம் யு இன்டேக்ஸ்:
I. இன்டேக்ஸ்: செப்டெம்பர்
II. ஜனவரி இன்டேக்ஸ்
III. ஃபெப்ரவரி ஜூன்.
பன்னாட்டவர் பாராட்டு:
முன்னேற்றமடைந்த மற்றும் பண்பாடு மிக்க கற்பிக்கும் முறைகள்
மற்றும் அறிவியல் அணுகுமுறைகள் கொண்ட உயர்ந்த கல்வித் தரங்கள் காரணமாக
உலக அரங்கில் ரஷ்ய உயர் மருத்துவக் கல்வி மிகச் சிறந்த நற்பெயரைப்
பெற்றுள்ளது.
கே எஸ் எம் யுவில் பெறப்படும் மருத்துவப் பட்டப்படிப்பு உலக நல்வாழ்வு நிறுவனம் (W.H.O) மற்றும் கிரேட் பிரிட்டன், ஃபிரான்சு உட்பட முக்கிய ஐரோப்பிய நாடுகளின் பொது மருத்துவக் கழகம் (G.M.C) மற்றும் பிற பன்னாட்டு மருத்துவ வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ மற்றும் உலக நல்வாழ்வு நிறுவனம் ஆகியவற்றின் பன்னாட்டுத் தர நிர்ணயத்தின்படி கே எஸ் எம் யு உட்பட ரஷ்யாவின் சிறந்த மருத்துவப் பல்கலைக்கழகங்கள் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளன. ஜேபிஏ மலேசியா, எம்சி ஸ்றி லங்கா மற்றும் பிற நாடுகளாலும் கே எஸ் எம் யு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.