குர்ஸ்க் நகரம்-ஓர் அறிமுகம்

    

மேல்நோட்டம்


குர்ஸ்க் ரஷ்யாவின் பழமையான நகரங்களுள் ஒன்று; இன்று இந்நகரம் உயிர்த்துடிப்புடன் சுறுசுறுப்பாக விளங்குவதுடன் வரவேற்கும் தன்மை கொண்ட மக்களைக் கொண்டுள்ளது. நகரை-இருட்டிய பின்னரும் கூடச்- சுற்றி வருகையில் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை எமது மாணவர்களில் பலர் கூறுகின்றனர்.  இந்நகரம் ஒவ்வொருவருக்கும் அவர்களின் ஆர்வத்துக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ப வரலாறு முதற்கொண்டு கலை, விளையாட்டு அதற்கு அப்பால் இன்னும் பிறவற்றிலும் அளிப்பதற்கு ஏதேனும் ஒன்றைக் கொண்டுள்ளது.


புவியியல்/தட்பவெப்ப நிலை


குர்ஸ்க் பகுதி ரஷ்யாவில் ஐரோப்பியப் பகுதியின் மையத்தில், மலையிடுக்குகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகளால் பிரிக்கப்பட்ட குன்றுகளின் சரிவான பகுதிகளில் காடுகளுக்கிடையில் அமைந்துள்ளது.  தட்பவெப்ப நிலை சுமாராகக் கண்டம் சார்ந்து விளங்குகிறது. இப்பகுதி அடர்த்தியான ஆற்று வலையமைப்புகளால் ஆனது.  நீர்ச் சுற்றுலா மற்றும் மீன்பிடிப்பில் ஆர்வம் கொண்டோர்க்கான ஆறுகள் உள்ளன:சீம், சையால், டஸ்கர் இன்னும் பிற


வரலாறு


குர்ஸ்க் வரலாற்றில் 1032ஆம் ஆண்டு முதலில் குறிக்கப்பட்டது; குர்ஸ்க் நகரின் மிகப் பழைய கட்டடமாக இருப்பது 1752இல் கட்டப்பட்ட அப்பர் சர்ச் ஆஃப் தி மொனாஸ்ட்ரி ஆகும்.  குர்ஸ்க் பகுதி பல நல் வாய்ப்பு கொண்ட மக்களின் சொந்த ஊராகும்: கப்பல் வல்லுநர் ஜி.ஐ.ஷெலிகோவ், பெரிய ரஷ்ய நடிகர் எம்.எஸ்.ஷெப்கின், வானியல் வல்லுநர் எஃப்.ஏ.செமினோவ், அறிவுக்கூர்மை வாய்ந்த வி.விபெட்ரோவ், எழுத்தாளர் எ.ஐ.நோஸ்கோவ், சிற்பி வி.க்ளைகோவ், ஆற்றல் வாய்ந்த கவிஞர் என்.எனசீவ், வண்ண ஓவியர் ஏ.ஏ.டெய்னிகா, இசை அமைப்பாளர் ஜி.விஸ்விரிடோவ் இன்னும் பலர்.

 

 

பண்பாடு/கலைகள்


குர்ஸ்க் ஸ்டேட் பல்கலைக்கழகம் செர்கல் ப்ரோஸ்குரின் என்னும் நடத்துநர் மற்றும் டிரம்பட் வாசிப்பாளர்  அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்  ரஷ்யன் சேம்பர் ஆர்கெஸ்ட்ராவின் இல்லமாக விளங்குகிறது.  புஷ்கின் அரங்கம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது; இதில் நிரந்தரமான கலைக்குழு உள்ளது மற்றும் அவ்வப்போதைய காட்சிகளும் நடைபெறுகின்றன.


பொழுதுபோக்கு


குர்ஸ்க் நகரைச் சுற்றி உயிர்த்துடிப்புள்ள இடங்கள் அமைந்துள்ளன; அங்கு நீங்கள் நண்பர்களைச் சந்திக்கலாம், ஓய்வெடுக்கலாம், பொழுதுபோக்கலாம்.  மேலும் துடிப்பான பொழுதுபோக்குகள் உங்களுக்கு வேண்டும் எனில்,  அதற்கும் குறைவில்லை; நகரிலும் அதைச் சுற்றிலும் கவர்ச்சியான பல இடங்கள் உள்ளன.