பன்னாட்

டுமாணவர்களுக்

கான தகவல்கள்:

    

____________________________________________________

பன்னாட்டு மாணவர்களுக்கான தகவல்கள்

____________________________________________________

கே எஸ் எம் யு எல்லா நாட்டு மாணவர்களிடமிருந்தும் விண்ணப்பங்களை வரவேற்கிறது; பல்வேறு வகையான எழுச்சியூட்டுகிற மாணவ சமுதாயத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம்; அது பற்றி நாங்கள் பெருமை அடைகிறோம்.


பன்னாட்டு மாணவர்களுக்கான படிப்புகள்


ரஷ்யாவில் ஆங்கில வழியில் முழு மருத்துவப் பட்டப் பயிற்சியை அளித்த முதல் பல்கலைக்கழகமாக விளங்குகிறது.  டிப்ளமாவுக்கு முந்தைய (ப்ரீ-மெடிசின்/கோர்ஸ்), டிப்ளமாவின் போதான (எம்.டி/அண்டர் கிராஜுவேட்), டிப்ளமாவுக்குப் பிந்தைய (போஸ்ட்-கிராஜுவேட்) கல்வித்துறைகளில் ஆங்கில வழியின் கீழ் வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கும் உரிமையை கே எஸ் எம் யு பெற்றுள்ளது.


சாதாரண மட்டத்திலான மாணவர் (அல்லது எந்த சமமான நிலைகள்).


ஓ-லெவல் கல்வித்தகுதி அல்லது ஏ-லெவலில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை  டிப்ளமாவுக்கு முந்தைய (ப்ரீ-மெடிசின்/கோர்ஸ்) படிப்பில் சேர்த்து அண்டர் கிராஜுவேட் படிப்புத் திட்டத்துக்குத் தகுதியுள்ளவர்களாக்க, கே எஸ் எம் யு வாய்ப்பினை வழங்குகிறது. இப்படிப்பின் கால அளவு 7 முதல் 10 மாதங்கள் ஆகும்; மேற்கொண்டு படிப்பைத் தொடர               கே எஸ் எம் யு உங்களை ஆயத்தப்படுத்தும்.


ப்ரீ-மெடிசின் ஆங்கில வழியில் படிக்க வேண்டிய பாடங்கள்:


1- ரஷ்ய மொழி

2- கணக்கு

3- உயிரியல்

4- வேதியியல்

5- இயற்பியல்

 

 

அட்வான்ஸ்டு மட்டத்திலான மாணவர் (அல்லது எந்த சமமான நிலைகள்)

ஏ-லெவல் கல்விச் சான்றிதழுடனான விண்ணப்பதாரர்கள் மருத்துவம், மருந்தியல் அல்லது ஸ்டொமொட்டாலஜி (பல்மருத்துவத்தில்) பிரிவில் டிப்ளமோ (அண்டர் கிராஜுவேட் கல்வித்திட்டம்) படிப்பில் சேரலாம்.


மருத்துவம்


மருத்துவத்தைப் பயிற்சி செய்வதற்குத் தகுதி வாய்ந்த மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க இக்கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களை மதிப்பீடு செய்யவும் நோயாளிகளின் வரலாறுகளை அறிதல், நோயாளிகளிடம் உரையாடுதல், நோயறிந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைத் திறன்களை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றிற்காக தரம் வாய்ந்த நோயாளிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.  பாடத்திட்டம் டாக்டர் ஆஃப் மெடிசின் (MD) பட்டத்திற்கான ஆறு ஆண்டுக் கல்வித்திட்டத்தை அளிக்கிறது.


மருந்தியல்


இக்கல்விப்பிரிவு மருந்துகள் மற்றும் நோய்களைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில்  மாணவர்களை ஆயத்தப்படுத்துகிறது.  மருந்தாளுநர்கள் மற்றும் பிற உடல்நலப் பிரிவினர் ஆகியோருக்கிடையே உறவை ஊக்குவிக்கும் வகையில்  பாடத்திட்டம் அமைந்துள்ளது.  மருந்தியல் பாடத்திட்டம் மாஸ்டர் ஆஃப் ஃபார்மசி (Pharm. D.) பட்டத்திற்கான ஐந்து ஆண்டுக் கல்வித்திட்டத்தை அளிக்கிறது.


ஸ்டொமொட்டாலஜி


இக்கல்விபிரிவு ஸ்டொமொட்டாலஜியில் ஐந்து ஆண்டுக் கல்வித் திட்டத்தை அளிக்கிறது.   நடைமுறைப் பயிற்சித் திறன் வளர்ச்சியை வலியுறுத்தும் வகையில் கற்பித்தல்-கற்றல் செயல்முறை அமைந்துள்ளது.  வெற்றிகரமான பணிக்கு முக்கிய காரணிகளாக விளங்கும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி மற்றும் பணி முறைகள், தனிப்பட்ட திறன்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகியவற்றிற்கு கவனிப்புடன் கூடிய கண்காணிப்பு

மேற்கொள்ளப்படுகிறது.


 அண்டர்கிராஜுவேட் (ட்ரான்ஸ்ஃபர்-கிரெடிட்)


பி.எஸ்சி பட்டப்படிப்பை நிறைவு செய்யாதவர்கள் அல்லது அதற்குச் சமமாகப் பட்டப்படிப்பின் முதலாண்டு முடித்தவர்கள் ஆகியோரை இந்த அண்டர் கிராஜுவேட் கல்வித்திட்டத்தில் சேர்த்துக்கொள்ள இத்திட்டம் அனுமதிக்கிறது.  விண்ணப்பதாரர்களின் பட்டப்படிப்பு பற்றி, நிர்வாக அலுவலகம் ஆய்வு செய்து தொடங்க வேண்டிய படிப்பின் கல்வி ஆண்டைப் பற்றிய முடிவை அளிப்பார்கள்.


ரஷ்ய மொழி வழியில் படிப்புகள்


ரஷ்ய மொழி வழியில் படிக்கத் தேர்வு செய்யும் விண்ணப்பதாரர் அனைவரும் 7 முதல் 10 மாதங்கள் வரையான ப்ரீ-யுனிவர்சிட்டி படிப்பை ஆயத்தக் கல்விப் பிரிவில் படிக்க வேண்டும்.

ப்ரீ-மெடிசின் ரஷ்ய வழியில் படிக்க வேண்டிய பாடங்கள்:


1- ரஷ்ய மொழி

2- கணக்கு

3- உயிரியல்

4- வேதியியல்

5- இயற்பியல்

 

கே எஸ் எம் யு வில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குக் கீழ்க்கண்டவற்றுள் ஒரு தகுதியை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்:


* அட்வான்ஸ் லெவல் (அல்லது இணையான எந்த கல்வியும்).

* அண்டர் கிராஜுவேட் (அல்லது ட்ராப்ஸ்ஃபர் கிரெடிட்).

* பட்ட மேற்படிப்பு

 

தீவிர ஆயத்தத் திட்டத்திற்குப் பின்னர், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவற்றுள் ஒரு டிப்ளமோ கல்வித் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்:


* மருத்துவக் கல்விப் பிரிவு – பொது மருத்துவம்.  படிப்புக் காலம்- 6 ஆண்டுகள்.

* மருந்தியல் கல்விப் பிரிவு – மருந்தியல். படிப்புக் காலம்- 5 ஆண்டுகள்.

* பல் மருத்துவக் கல்விப் பிரிவு – ஸ்டொமொட்டாலஜி.  படிப்புக் காலம்- 5 ஆண்டுகள்.                   * உயிரித் தொழில்நுட்பக் கல்விப் பிரிவு – உயிரித் தொழில்நுட்பம். படிப்புக் காலம்- 5 ஆண்டுகள்.

* செவிலியர் கல்விப் பிரிவு – செவிலியர் பணி. படிப்புக் காலம்- 5 ஆண்டுகள்.                   .

* சமூக சேவைக் கல்விப் பிரிவு – சமூக சேவை. படிப்புக் காலம்- 5 ஆண்டுகள்.                   .

* மருத்துவ உளவியல் கல்வி பிரிவு – மருத்துவ உளவியல். படிப்புக் காலம்- 6 ஆண்டுகள்.                   

* பொது உடல்நலனில் பொருளியல் மற்றும் மேலாண்மை கல்விப் பிரிவு - பொது உடல்நலனில் பொருளியல் மற்றும் மேலாண்மை. படிப்புக் காலம்- 5 ஆண்டுகள்.                   

* உயிரித் தொழில்நுட்பக் கல்விப் பிரிவு (உயிரியலில் தீவிரமான பொருட்களில் வேதித் தொழில்நுட்பம்) - உயிரித் தொழில்நுட்பம்.  படிப்புக் காலம்- 5 ஆண்டுகள்.                   

* தடுப்பு மருத்துவக் கல்விப் பிரிவு – தடுப்பு மருத்துவம்.  படிப்புக் காலம்- 5 ஆண்டுகள்.                   

* குழந்தை மருத்துவக் கல்விப் பிரிவு – குழந்தை மருத்துவம். படிப்புக் காலம்- 5 ஆண்டுகள்.                   

பட்ட மேற்படிப்பு

பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் மேற்கொண்டு தங்கள் படிப்பைத் தொடர கே எஸ் எம் யு பட்ட மேற்படிப்புத் திட்டத்தையும் அளிக்கிறது.