லாசரென்கோ விக்டர் அனடோவிலிச் (Lazarenko Victor Anatolievich) 1956ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 26இல் சுமியில் பிறந்தார். பள்ளிக்கல்வியை முடித்த பின்னர், அவர் கே எஸ் எம் யுவில் (1973-79) சேர்ந்து படித்தார். பெலிகொரோட் வட்டார குழந்தைகள் மருத்துவமனையில் சிறப்புப் பயிற்சி பெற்று ‘குழந்தைகள் அறுவைமருத்துவத்தில்’ பட்டதாரியானார்; ஷெபிகினோவில் (பெலிகொரோட் வட்டாரம்) குழந்தைகள் மருத்துவராகப் பணியாற்றினார்.
மருத்துவமனை அறுவை சிகிச்சைத் துறையில் (1983-85) மருத்துவமனை மருத்துவராகவும், (1985இல் இருந்து) பட்ட மேற்படிப் பு மாணவராகவும், (1988இல் இருந்து) ஓர் ஆசிரியராகவும், (1992இல் இருந்து) இணைப் பேராசிரியராகவும், (1996இல் இருந்து) அறுவைசிகிச்சை நோய்கள் துறை-1இல் பேராசிரியராகவும் அவர் பணியாற்றினார். 2001ஆம் ஆண்டு முதல் பட்ட மேற்படிப்புக் கல்விப் பிரிவில் அறுவைசிகிச்சை நோய்கள் துறையின் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
2001ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை குர்ஸ்க் வட்டார
மருத்துவமனையில் கார்டியோவாஸ்குலர் அறுவை சிகிச்சைத் துறையின்
துறைத்தலைவராகவும், குர்ஸ்க் வட்டாரத்தில் சுயேச்சையான
கார்டியோவாஸ்குலர் அறுவை சிகிச்சை மருத்துவராகவும் அவர்
பணியாற்றினார். 2001ஆம் ஆண்டு பட்ட மேற்படிப்புக் கல்விப்
பிரிவின் தலைவராக (டீனாக) விளங்கினார், 2003 முதல் 2009 வரை
கே எஸ் எம் யுவின் ஆராய்ச்சிப் பணிகளுக்கான துணை முதல்வராக இருந்தார், ஆகஸ்டு 2009இல் பல்கலைக்கழகத் தலைவராக ஆனார். 1988இல் வி. ஏ. லாசரென்கோ ஒரு ஆராய்ச்சியைச் சமர்ப்பித்தார், 1995இல் டாக்டர் ஆஃப் மெடிசின் பட்டம் பெற்றார். 1997இல் ‘பேராசிரியர்’ பட்டம் பெற்றார்.
வி. ஏ. லாசரென்கோ `த்ரோம்போசைட்ஸ் செயல்திறனால் உடலில் ஏற்படும் ஆற்றல் ஹோமோஸ்டேசிஸ் தொல்லையின் கீழான இம்முனோசப்ரெஷன் வளர்ச்சியின் ஒழுங்குமுறை’
என்னும் அறிவியல் மருத்துவக் கண்டுபிடிப்பின் ஆசிரியராவார். அவர்
500 வெளியீடுகளுக்கு மேற்பட்டவற்றிற்கும் (15 தனிநூல்களுக்கும்)
மற்றும் 30 கண்டுபிடிப்புகளுக்கும் உரிமையாளராவார், வி. ஏ. லாசரென்கோ
வழிகாட்டுதலில் 17 பேரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் 1 முனைவர் பட்ட
ஆய்வேடும் ஏற்கப்பட்டுள்ளன.
ரஷ்யன் ஃபெடரேஷனின் நல்வாழ்வு மற்றும் சமூகத் துறை அமைச்சகம்,
குர்ஸ்க் வட்டார டூமா, குர்ஸ்க் வட்டார நிர்வாகம், குர்ஸ்க் வட்டார
கல்வி மற்றும் அறிவியல் துறை, புலம்பெயர் சேவை நிர்வாகம் ஆகியவற்றில்
பல்வேறு பட்டயங்கள் அவருக்கு
வழங்கப்பட்டுள்ளன. அவருக்குச் சில கௌரவப் பட்டங்களும் உள்ளன
(‘மிகச் சிறந்த பொது சுகாதார அதிகாரி’, ‘ரஷ்யன் ஃபெடரேஷனின் கௌரவ
மருத்துவர்’, 2003 போன்றவை).
வி.ஏ.லாசரென்கோ, கே எஸ் எம் யு செனட் தலைவர், அறுவை சிகிச்சை மற்றும் கார்டியாலஜி டிசர்ட்டேஷன் செனட் தலைவர்,’ இதழின் முதன்மை ஆசிரியர், ’ இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளையும் வகித்து வருகிறார்.
அறுவை சிகிச்சை மற்றும் கார்டியோவாஸ்குலர் அறுவை சிகிச்சை ஆகியவற்றில் மிக உயர்ந்த வகையான அறுவை சிகிச்சை மருத்துவராக அவர் விளங்குகிறார், RFஇன் அறிவியல்களின் கல்வித்துறைக் கல்வியாளராகவும் அவர் உள்ளார்.
கே எஸ் எம் யுவின் முதல்வர்