உங்கள் எதிர்காலத்தைச் சிறப்பாக உருவாக்குவதற்கு உதவும் வகையில் புதிய வாய்ப்புகளும் எண்ணங்களும் நிரம்பிய சூழலைக் கொண்ட உலகத்தரம் வாய்ந்த கல்வியை கே எஸ் எம் யு மாணவர்களுக்கு வழங்குகிறது. புதிய திறன்களைக் கற்றல், புதிய ஆர்வமூட்டும் மனிதர்களைச் சந்தித்தல்; வாழ்க்கைக்கு உகந்த நண்பர்களைப் பெறுதல்; பல்கலைக்கழக அனுபவத்தில் இவையனைத்தும் சாதாரண ஒரு பகுதியே; கே எஸ் எம் யு இதற்கு விதிவிலக்கல்ல.
கே எஸ் எம் யு வில் 5,500 க்கு மேற்பட்ட மாணவ்ர்கள் (இவர்களில் 1200க்கு மேற்பட்டோர் பன்னாட்டு மாணவர்கள்) படிப்பதால் இவ்வளாகம் பல்வேறு நடவடிக்கைகள், பண்பாட்டுக் கூட்டுறவு நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் களை மிகுந்து காணப்படுகிறது. விளையாட்டு நிகழ்ச்சிகளிலிருந்து கலை நிகழ்ச்சிகள் வரை வேறெங்கும் காண முடியாத வகையில் குர்ஸ்க் பகுதி புதுமை மிக்கதாகப் பொலிந்து விளங்குகிறது.
எமது மாணவர்கள் விளையாட்டுகள் முதற்கொண்டு கலை, சமூக மற்றும் பிற அறிவுசால் நிகழ்ச்சிகள் வரை பல்வேறு வளம் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உங்கள் ஆர்வம் எதுவாக இருப்பினும் கே எம் எஸ் யு வளாக வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றை அளிக்கிறது.
கே எஸ் எம் யுவில் இருப்போர் புதிய நண்பர்களைச் சந்திப்பதற்குப் பல வழிகள் உள்ளன; எடுத்துக்காட்டாக துடிப்புமிக்க மாணவர் மன்றங்களில் சேரலாம், அல்லது நீங்களே ஒன்றைத் துவக்கலாம். எமது பெரிய பரந்துபட்ட மாணவர் சமுதாயம் சமூகம் சார்ந்தும் புதிய திறன்களைக் கற்கும் வகையிலும் புதிய மனிதர்களைச் சந்திக்கும் வகையிலும் பெரியதோர் ஆர்வமூட்டும் சூழலை உருவாக்குகிறது!
ரஷ்யப் பண்பாடு மற்றும் வரலாறு பற்றி மேலும் அறியவும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இடங்களை உங்கள் புதிய நண்பர்களுடன் கண்டு மகிழவும் உங்களுக்கு வாய்ப்புகள் உண்டு. உள்ளூர் கடைகள், உணவு விடுதிகள், பொருட்காட்சி சாலைகள் ஆகியவற்றில் நேரத்தைச் செலவழிக்கலாம் அல்லது அருகிலுள்ள அழகிய பூங்கக்களில் உலா வரலாம்.