பல்கலைக்கழகத் தலைவரின் ஆலோசகர் அலுவலகம்

    

பல்கலைக்கழகத் தலைவரின் ஆலோசகர் அலுவலகம் வருங்கால மாணவர்களுக்கு, அவர்களின் விண்ணப்பித்தல் மற்றும் சேர்க்கைக் காலங்களில், ஆதரவும் வழிகாட்டுதலும் அளிப்பதற்குப் பொறுப்பானதாகும்.

தலைவரின் ஆலோசகர்:

  1. உத்திகள், பயிற்சி மற்றும் கல்விப் பிரச்சினைகள், அறிவியல் , கல்வி மற்றும் பன்னாட்டு மாணவர்களின் பயிற்சிகளில் அரசின் கொள்கை ஆகியவை பற்றிய தகவல்களைத் திரட்டி பகுப்பாய்வு செய்பவர்;  
  2. பகுப்பாய்வு அறிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு மாணவர்களுக்குக் கற்பித்தலுக்கான பிற திட்டங்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் பங்கேற்பவர்;
  3. அயல்நாட்டுத் தூதரகப் பிரதிநிதிகளுடன் தலைவர் சந்திப்புகளுக்கான ஆயத்தக் கூட்டங்களில் பங்கேற்பவர்;
  4. பல்கலைக்கழக முதல்வர், சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மற்றும் அரசு நிறுவனங்களுடன் பன்னாட்டு மாணவர்கள் சந்திப்பதற்கான ஆயத்தக் கூட்டங்களில் பங்கேற்பவர்; 
  5. பன்னாட்டு மாணவர்களைத் தேர்வு செய்தல் மற்றும் பயிற்சியளித்தல் ஆகியவற்றில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்;
  6. ரஷ்யன் ஃபெடரேஷனின் சட்டத்திற்கேற்ப நிதி, சமூக, விசா தேவைகளில் பன்னாட்டு மாணர்வர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்;
  7. புதிதாக வரும் மாணவர்களை மாஸ்கோவிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவருவதற்கான போக்குவரத்து மற்றும் விலக்கப்பட்ட பன்னாட்டு மாணவர்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்தல் ஆகிய பிரச்சினைகளில் தீர்மானம் செய்பவர்;
  8. பன்னாட்டு மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகள், பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கான ஆயத்தம் செய்வதிலும், நடத்துவதிலும் உதவுபவர்;
  9. கல்வி தொடர்பான நூல்களைப் பன்னாட்டு மாணவர்களுக்கு வழங்குவதில் பலகலைக்கழகத்திற்கு உதவுபவர்;

10. பன்னாட்டு மாணவர்களின் பயிற்சிகளுக்கான கடன் செலுத்தும் பிரச்சினைகளில் உதவுபவர்;

11. முதல்வரின் ஆலோசனைகளைச் செயல்படுத்துபவர்;

அயல்நாட்டு மாணவர்களுக்குக் கற்பிப்பதில் பல்கலைக்கழகச் செயல்பாடுகளின் மேம்பாட்டிற்குத் தேவையான தீர்மானங்கள், பரிந்துரைகள் ஆகியவற்றை உருவாக்குபவர்.

பல்கலைக்கழகத் தலைவரின் ஆலோசகர் அலுவலகம் KSMU: Dr. Mohamad Chahine, Eng. Phd

 

T: +7 4712 513748

E: Chahine@kgmu.com

 

Address: Kursk State Medical University

C/O Mohammed Chahine
Karl Marx No.3, Main Campus, office 127
Kursk city, index: 305041, Russia.

 

Dr. Mohamad Chahine, Eng. Phd

பல்கலைக்கழகத் தலைவரின் ஆலோசகர் அலுவலகம்

    

Image description

Mohamad Chahine, Eng. Phd

பல்கலைக்கழகத் தலைவரின் ஆலோசகர் அலுவலகம்