உயர்கல்வி மற்றும் போஸ்ட் டிப்ளமோ தொழிற்கல்வித் துறையின் பன்னாட்டு ஒத்துழைப்பில் கே எஸ் எம் யு பங்கேற்பதைப் பன்னாட்டு உறவுகளுக்கான நிர்வாகம் அளிப்பதுடன் கீழ்க்கண்ட பிரச்சினைகளையும் நிர்வகிக்கிறது :
- உயர்கல்வி மற்றும் போஸ்ட் டிப்ளமோ தொழிற்கல்வித் துறையின் மேம்பாட்டிற்கான பன்னாட்டுத் திட்டங்களில் பங்கேற்றல்;
- கல்வி சேவைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தகளையும் முடிவான உடன்படிக்கைகளையும் செய்து கொள்வது;
- மாணவர்கள், பட்ட மேற்படிப்பு படிப்போர், முனைவர் பட்டம் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் பணியாளர்கள் ஆகியோருக்கான பிற திட்டங்களில் பங்கேற்பது;
- ரஷ்யாவிலுள்ள அயல்நாட்டுத் தூதரகங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள்-கூட்டாளிகள் ஆகியோருடனான உறவுகளை அளித்தல்;
- வெளிநாட்டில் கல்விச் சேவைகளை சந்தைப்படுத்தல்;
- கே எஸ் எம் யுவில் கல்வி கற்க அயல்நாட்டு குடிமக்களைச் சேர்த்துக் கொள்ளுதல்;
- அயல்நாட்டு மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் காவல்துறையுடன் ஒத்துழைத்தல்;
- கே எஸ் எம் யுவுக்கு அயல்நாட்டு மாணவர்களைச் சேர்க்க அழைத்தல்;
- கல்வி கற்கும் இடத்திற்கு அயல்நாட்டு மாணவர்களைத் துணையுடன் அழைத்துச் செல்லுதல்;
- அயல்நாட்டு மாணவர்களுக்கு விடுதிகளில் தங்கும் வசதி அளித்தல்;
- கே எஸ் எம் யுவுக்கு நுழைவுத் தேர்வுகளை ஏற்பாடு செய்தல்;
- ரஷ்யன் ஃபெடரேஷனில் அயல்நாட்டுக் குடிமக்களுக்கான சட்ட நிலைமைகள், ரஷ்யாவில் தங்கும் வசதிக்கான விதிகள், அயல்நாட்டு மாணவர்களுக்கான சுகாதார விதிமுறைகள், ரஷ்யன் ஃபெடரேஷன் பகுதிகளின் பயண விதிமுறைகள் மற்றும் மேற்கூறிய விதிமுறைகளின் கட்டுப்பாடு ஆகியவை பற்றி அயல்நாட்டு மாணவர்களுக்குத் தகவல் அளித்தல்;
- பல்கலைக்கழக மாணவர் விடுதிகளின் விதி முறைகள் பற்றி அயல்நாட்டு மாணவர்களுக்கு தகவல் அளித்தல்;
- விடுமுறை நாட்கள் உட்பட எல்லா நாட்களிலும் படிப்பு சாராத பிற பல்வேறு நடவடிக்கைகளை நடத்துதல்;
- வாழ்க்கை முறை நிலைமைகள் பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்க அயல்நாட்டு மாணவர்களுக்கு உதவுதல்;
- வட்டார விசா துறையில் அயல்நாட்டு மாணவர்களைப் பதிவு செய்தல்;
- ரஷ்யன் ஃபெடரேஷனுக்கு வெளியே செல்ல விசா வழங்குதல்
- அயல்நாட்டு மாணவர்கள் பற்றிய தகவல்களைப் பகுப்பாய்வு செய்து தொகுத்தல்;
- கல்வி மற்றும் விடுதியில் தங்குவதற்கான பணம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தல்.
Iobidze Yurij Shalvovich