சிறப்புவியல் – மருந்துவியல் [பார்மஸி]
தகுதி : மருந்துவியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் (டெண்டிஸ்ட்)
படிப்பிற்கான கால வரையறை – 5 வருடங்கள்
1966 இந்த துறை தொடங்கப்பட்டதிலிருந்து, 40 வருடங்களில் 10,000-க்கும் மேற்பட்ட மருந்துவியலாளர்கள் பயிற்சி பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ருஷியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள நேரடி பயிற்சி மருந்தகங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வருடங்களிலும் பட்டதாரிகளான ஆசிரியர்களில் 23 D.Sc., 123 Ph.D.-யும் உள்ளடங்குவார்கள். புதிய பள்ளிகள் மற்றும் மூல செயல்முறைகளை பின்பற்றும் ஸ்தாபகர்களில் வி.எல்.பஸார்னி, பேராசிரியர், சர்வதேச தகவல் –கல்வித்துறை தொடர்புடைய உறுப்பினர், பேராசிரியர் வி.என். புபேன்சிகோவா, ருஷியன் அகாதமியைச் சேர்ந்த இயற்கை அறிவியல் தொடர்புடைய உறுப்பினர் மற்றும் பேராசிரியரான ஜி.ஏ.சாலி, பேராசிரியர் டி.ஏ பான்க்ரூஷேவா, பேராசிரியர் எல்.ஒய்.சிப்லிவாயா ஆகியோர் உள்ளடங்குவார்கள்.
பல்கலைக்கழகத்தில் 28 துறைகள் மருந்துவியல் பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்றுவிக்கும் ஆசிரியர்களில் 40 D.Sc., 150 அதிகமான Ph.D.-யாளர்களும் உள்ளடங்குவார்கள்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய கல்விப் பாடங்களானது 4 பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது : மனித அறிவுச்சார்ந்த துறை மற்றும் சமூக-பொருளாதார அறிவியல்கள், இயற்கை அறிவியல்கள், மருத்துவ-உயிரியல் சார்ந்தவை, தொழில் நிபுண மற்றும் சிறப்பு நிபுண துறைகள். இந்த பாடத்திட்டத்தைப் படித்த பட்டதாரிகள் அடிப்படை சிறப்பு நிபுணத்துவம் பெறுவதற்காக ஒரு வருட காலம் படித்து பயிற்சி பெற வேண்டியிருக்கும். இதற்காக பின்வரும் சிறப்புவியல்களை தேர்ந்தெடுக்கலாம்:
மருந்து நிர்வாகம் மற்றும் பொருளாதாரம், மருந்துவியல் தொழில்நுட்பம், மருந்துவியல் வேதியியல் மற்றும் மரபணு மருந்திவியல் அல்லது முழு நேரப்படிப்பு அல்லது தொலை தொடர்பு முதுவியல் படிப்பு.
தொழில் ரீதியான பயிற்சி பெற்று முடிந்த பட்டதாரி தேர்ந்தெடுக்கும் பிரிவுகளில்: சிறந்த நிர்வாகம் மற்றும் தயாரிப்பு செயல்முறையை மருந்துவியல் நிறுவனங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் உள்ளடங்கும். அத்துடன், மருத்துவ ரீதியான மருந்துகளின் தர கட்டுப்பாடு மையங்கள் (கட்டுப்பாடு மற்றும் பகுப்பாய்வு ஆய்வகங்கள்), விஷதன்மை கண்டறிதல் மற்றும் உயிர்-வேதியியல் ஆய்வகங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றிலும் பணியாற்றமுடியும்.
ஆசிரிய டீனாகவும்