கே எஸ் எம் யு வில் உயிரி தொழில்நுட்பவியல் கல்வித் துறை

    

சிறப்புவியல் – “உயிரி தொழில்நுட்பம்)


தகுதி : எஞ்ஜினியர் (பொறியாளர்)


படிப்பிற்கான கால வரையறை – 5 வருடங்கள்

 

1992-ல் இந்த உயிரி தொழில்நுட்ப கல்வித் துறையானது தொடங்கப்பட்டது.  இந்த துறையானது இந்த 15 வருடங்களில், மருந்துப் பொருட்கள் மற்றும் இந்த மருந்துப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளின் உற்பத்தி, வியாபாரம் ஆகியவற்றில் 400க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் உருவாக்கியுள்ளது. இந்த துறையைச் சேர்ந்த 8 பட்டதாரிகள் அறிவியலாளர்களாகவும், 15 பேர்கள் பி.எச்.டி ஆராய்சி கட்டுரை சமர்ப்பிக்கும் நிலையிலும் பணிபுரிகிறார்கள். பல பட்டதாரிகளில் நிறுவன துறை தலைவர்களாகவும்,  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களிலும் பணிபுரிகிறார்கள்.


மாணவர்கள் 28 துறைகளில் படிக்கிறார்கள்.  இங்கிருக்கும் ஆசிரியர்களில் 36 பேராசிரியர்களும், மற்ற பல்கலைக் கழகங்களில் பணிப்புரிந்துக் கொண்டே, இங்கும் பணியாற்றும் 28 ஆசிரியர்கள், ருஷியன் ஃபெடரேஷனைச் சேர்ந்த 2 ஹானர்டு அறிவியலார்கள்,  ருஷியன் ஃபெடரேஷனின் உயர் கல்வியைச் சேர்ந்த ஒரு ஹானர்டு உறுப்பினர் பல்வேறுபட்ட ருஷ்ய மற்றும் சர்வதேச அகதெமிகளைச் சேர்ந்த மற்றும் தொடர்புடைய 12 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.


 ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த கல்வி துறை 4 பெரும் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது: அவையாவன- மனித அறிவுச்சார்ந்த துறை மற்றும் சமூக-பொருளாதார கணிதம் மற்றும் அறிவியல்கள், தொழில் நிபுணத்துவம் மற்றும் சிறப்பு பிரிவுகள் போன்றவையாகும்.


இந்த துறையின் மூலம் பட்டம் பெற்றவர்கள் – வேதியியல்-மருத்துவ நிறுவனங்கள், உயிரி-தொழிற்சாலைகள், நொதிப்பு மற்றும் ஈஸ்டு தயாரிக்கும் நிறுவனங்கள் (குளிர்பானங்கள், சாக்லேட் போன்ற இனிப்புப் பொருட்கள், பால்பண்ணைத் தயாரிப்புகள் மற்றும் மற்ற உணவு தொழில் சார்ந்த நிறுவனங்கள்) ஆகியவற்றில் இயந்திரவியல் பொறியாளர்களாக பணியாற்ற முடியும். வேதியியல்


நிறுவனங்களில், பகுப்பாய்வு நிறுவனங்களின் வேதியியல் ஆய்வகங்களில், குற்றவியல் நிபுணத்துவ மையங்கள், சுகாதார சேவைகள், தரக்கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றில் வேதியியல் பொறியாளர்களாகவும்,  அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சி உதவியாளர்களாகவும், சிறப்பு மற்றும் மேல் நிலை கல்வி மற்றும் நடுநிலை கல்வி மையங்களில் ஆசிரியர்களாகவும் பணிபுரிய முடியும்.


இரண்டு சிறப்பு நிபுணத்துவங்களில் முதுகலை பட்டபடிப்புகளும் உள்ளன: உயிரி-தொழில்நுட்பவியல்; கட்டமைப்பு பகுப்பாய்வு, மருத்துவ சூழ்நிலையில் தகவல்கள் செயலாக்கம் மற்றும் நிர்வாகம் போன்றவை.