சிறப்புவியல் – மருத்துவ மனவியல்
தகுதி : மனவியல் மருத்துவர்
படிப்பிற்கான கால வரையறை – 5 வருடங்கள்
1990லிருந்து குர்ஸ்க் மாநில மருத்துவ பல்கலைக்கழகம் சிறப்பு நிபுண 030302-ன் “மருத்துவ மனவியல்” சிறப்பு நிபுணர்களை தயார்செய்து வருகிறது.
பொது நல நிறுவனங்கள், குர்ஸக் மற்றும் ருஷ்யாவில் உள்ள மேல்நிலை கல்வி நிறுவனங்கள் மற்றும் மைய கறுப்பின பகுதி பிரிவை சேர்ந்த மக்களுக்கு மன ரீதியான ஆதரவு அளித்தல் போன்றவற்றில் இந்த துறை பட்டதாரிகள் வெற்றிகரமாக பணியாற்றுகிறார்கள்.
அடிப்படை மனவியல் கல்வித்திறன் கொண்ட 37 சிறப்பு நிபுணர்கள் மற்றும் நேரிடை சமூக நல அமைப்புகளைச் சேர்ந்த முன்னணி நிபுணர்களால் மாணவர்களுக்கு கல்வியளிக்கப்படுகிறது.
இங்கு பணிபுரியும் அலுவலகர்களில் அறிவியலில் முனைவர் பெற்ற 6
பேர்கள், 14 அறிவியல் புலத்தைச் சேர்ந்தவர்கள், மனவியல் அறிவியலைச்
சேர்ந்த சர்வதேச அகதெமியின் ஒரு உறுப்பினர், இயற்கை அறிவியல்
அகதெமியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர், பெட்ரோஸ்கிஜ் அறிவியல் மற்றும்
கலை அகதெமியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள், குழந்தை அறிவியல் கல்வியின்
சர்வதேச அகதெமியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோர் அடங்குவார்கள்.
இக்கல்வித்துறையில் மனவியல் பயிற்சி அனுபவம் பெறுவதற்கான ஒரு ஆய்வகம்,
மாணவர்களுக்கான மனவியல் ஆதரவு தரும் ஒரு மையம் ஆகியன உள்ளன. குர்ஸக்
மக்களுக்கு மனவியல் ஆதரவுத் தரும் நிறுவனங்கள் மற்றும் பொது நல
அமைப்புகளை சிறப்பு நிபுணத்துவ பிரிவு என்ற அடிப்படையில்
முழுமையாக இந்தத் துறை மாணவர்கள் அறிந்துக்
கொள்கிறார்கள்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த கல்வி துறையானது: பொது கணிதம்
மற்றும் பொது அறிவியல், பொது மனித அறிவுச்சார்ந்த துறை மற்றும்
சமூக-பொருளாதாரம் மற்றும் பொது தொழில் நிபுணப்பிரிவுகள் மற்றும்
சிறப்பு நிபுணத்துவ பிரிவுகள், சிறப்பு பயிற்சிகள் மற்றும் மேற்பார்வை
ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
“மருத்துவ மனவியலில்” சிறப்பு நிபுணத்துவமான உயர்ந்த மனவியல் கல்வி கற்ற ஒரு சிறப்பு நிபுணர், மனவியலாருடன் இணைந்து ஒரு மனவியல் மருத்துவராக செயல்புரிய முடியும். மேலும் பொது நல ஆரோக்கிய நிறுவனங்களில் ஒரு மருத்துவ உளவியலாராக, மனவியல் பயிற்சியாளாராக மற்றும் மேல் நிலை கல்வி நிறுவனங்களில் மனவியல் கற்பிக்கும் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும்.
ஆசிரிய டீனாகவும்