உயர் செவிலியர் கல்வித் துறைக்கு உங்களை வரவேற்கிறோம்

    

சிறப்புவியல் – “செவிலியர்”


தகுதி : மேலாளர்


பயிற்சி வகை – முழு நேரம் மற்றும் தொலைதூர கல்வி


படிப்பிற்கான கால வரையறை – 5 வருடங்கள்


இந்த உயர் செவிலியர் துறையானது 1 செப்டம்பர் 1992-ல் தொடங்கப்பட்டது.

 

பல்கலைக்கழகத்தில் 45 துறைகளில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. செவிலியர் மேலாளரின் பயிற்சி தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்தப் பல்கலைக்கழகத்தில் செவிலியர் கல்வித்துறை 1993-ல் தொடங்கப்பட்டது. இந்த துறையில் தற்போது பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இந்தத் துறையில் – 70 D.Sc., 275Ph.D., ருஷியன் ஃபெடரேஷனைச் சேர்ந்த 2 ஹானர்டு அறிவியலார்கள், ருஷியன் ஃபெடரேஷனின் உயர் கல்வியைச் சேர்ந்த ஒரு ஹானர்டு உறுப்பினர் பல்வேறுபட்ட ருஷ்ய மற்றும் சர்வதேச அகதெமிகளைச் சேர்ந்த மற்றும் தொடர்புடைய 35


உறுப்பினர்களையும், ருஷியன் ஃபெடரேஷனைச் சேர்ந்த 10 ஹானர்டு மருத்துவர்கள் மருத்துவ துறைகளில் பணிபுரிபவர்களையும் சேர்த்து, 400 ஆசிரியர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. உண்மையில் அனைத்து ஆசிரியர்களும் உயர் மற்றும் முதல் நிலை மருத்துவ பிரிவைச் சேர்ந்தவர்கள்.


ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த கல்வி துறை 5 பெரும் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது: மனித அறிவுச்சார்ந்த துறை மற்றும் சமூக-பொருளாதார அறிவியல்கள், இயற்கை அறிவியல்கள், மருத்துவ-உயிரியல் சார்ந்தவை, மருத்துவ-முன்பாதுகாப்பு மற்றும் மருத்துவயியல் பிரிவுகள்.

 

இந்த துறையின் மூலம் பட்டம் பெற்றவர்கள் , நேரடி பயிற்சி பாடப்பிரிவுகளில் சேர முடியும்– குர்ஸக் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இயங்கும் மருத்துவ முன் தடுப்பு முன்னணி நிறுவனங்களில் தலைமை செவிலியர் சேவைகளில் இந்த துறையின் பட்டதாரிகள் சேர முடியும். மருத்துவர்கள்-புள்ளியிலாளர்கள், மருத்துவ கல்லூரிகளில் அல்லது செவிலியர் துறை ஆகியவற்றில் ஆசிரியர்களாகவும் பணி புரிய முடியும்.