மருத்துவ கல்வித்துறைக்கு உங்களை வரவேற்கிறோம்

    

சிறப்புவியல் –  பொது மருத்துவம்


தகுதி : மருத்துவர்


படிப்பிற்கான கால வரையறை – 6 வருடங்கள்

 

1935-ல் இந்த கல்வித் துறை தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த துறையின் மூலமாக 20,000 மேற்பட்ட மருத்துவர்கள் பயிற்சியும் பெற்று, பட்டமும் பெற்றிருக்கிறார்கள். அனைத்து வருடங்களிலும் துறை படிப்புகளில் பட்டதாரிகளானவர்களில் 120 D.Sc., 650-க்கும் மேற்பட்ட Ph.D பெற்றவர்களும் உள்ளடங்குவார்கள். பல பட்டதாரிகள் புதிய பள்ளிகள் மற்றும் மூல  அறிவியல் செயல்முறைகூடங்களை நிறுவியுள்ளார்கள். அவர்களில் ருஷியன் அகாதெமியின் மருத்துவ அறிவியல் கல்வியாளர்களான – வி.என். நிகோலாஇவா-மென்ஷிகோவா, வி.எஸ். ரியாபட்செவ், யு.கே. ஸ்க்ரிப்கென், வி.ஜி.கோஸ்டிஷெவ், RAMS தொடர்புடைய உறுப்பினர்களான ஏ.எஃப்.பைகோவ்ஸ்கி, வி.எல்.குருயெவ், ஓ.கே.ஸ்கோபெல்கின், ஜி.யெ. ஆஸ்ட்ரோவெர்க்வ் ஆகியவர்களை குறிப்பிடலாம்.

 

 பல்கலைக்கழகத்தில் 49 துறைகளில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.  இந்த துறையில் தற்போது பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக – 70 D.Sc., 275 Ph.D., ருஷியன் ஃபெடரேஷனைச் சேர்ந்த 2 ஹானர்டு அறிவியலார்கள், ருஷியன் ஃபெடரேஷனைச் சேர்ந்த ஹானர்டு மேல் கல்வியாளர்களாக பணிபுரிபவர்கள், பல்வேறுபட்ட ருஷ்ய மற்றும் சர்வதேச கல்வியாளர்களை உறுப்பினர்களாக கொண்ட - 35-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் அதன் தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள்.  ருஷியன் ஃபெடரேஷனைச் சேர்ந்த 10 ஹானர்டு மருத்துவர்கள் மருத்துவ துறைகளில் பணிபுரிகிறார்கள். உண்மையில் அனைத்து ஆசிரியர்களும் உயர் மற்றும் முதல் நிலை மருத்துவ பிரிவைச் சேர்ந்தவர்கள்.

 

ஒன்றுக்கொன்று தொடர்புடைய கல்வி துறைகளானது 5 பெரும் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது : மனித அறிவுச்சார்ந்த துறை மற்றும் சமூக-பொருளாதார அறிவியல்கள், இயற்கை அறிவியல்கள், மருத்துவ-உயிரியல் சார்ந்தவை, மருத்துவ-முன்பாதுகாப்பு மற்றும் மருத்துவயியல் பிரிவுகள்.

 

மருத்துவ கல்வியறிவு பெற்ற பட்டதாரிகள் மேலும் மருத்துவ சிறப்பு நிபுணத்துவ படிப்பான 35 சிறப்பியல்கள், நேரிடை பயிற்சி பாட திட்டங்களான 28 சிறப்பியல்கள், முதுகலை பட்ட படிப்பான 47 சிறப்பியல்களில் சேருகின்றனர். பட்டதாரிகளின் சிறப்பு நிபுணத்தன்மையானது அவர்கள் பெற்ற சிறப்பியல்கள் மற்றும் பொது நலம், சமூக பாதுகாப்பு, மருத்துவ மற்றும் உயிரியல் அறிவியல்கள், மருத்துவ கல்வி, இராணுவங்களில் மருத்துவ சேவை, பொது நல பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.